தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் சத்தியா விஜயவண்ணன். இவர் டிப்ளமோ விவசாயம் படிப்பு படித்துள்ளார். மேலும் இவர் தனது ஊரான கண்டியூர் பகுதியில் இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் என்கிற விவசாயம் சார்ந்த(உரம், விதைகள், பூச்சிக்கொல்லி) நிறுவனத்தை கடந்த 7 வருடங்கள் தனது கணவர் விஜயவண்ணன் அவர்ளுடன் இணைந்து திறம்பட நடத்தி வருகிறார்.

மேலும் இவர்கள் மேல தஞ்சை, காவிரி படுகையை சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களில் வயல் மற்றும் நாற்றாங்கால் சமன் படுத்துதல் குறித்த ஆலோசனை, நடவுப்பணி மற்றும் உரமிடுதல் குறித்த ஆலோசனை, பூச்சிக்கொல்லி நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனை, விளை பயிர்களான நெல், வாழை, வெற்றிலை, வெங்காயம் நடவு குறித்த ஆலோசனை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகளை கடந்த 7 வருடமாக திறம் பட செய்து வருகிறார்.
மேலும் இவர் விவசாயிகளுக்கு விவசாயத்தை மேம்படுத்தும் சீரிய பணியை தொடர்ந்து செய்து வருவதால் தங்க மகள் விருது வழங்கி கௌரவிக்கபட இருக்கிறது.
இவரின் பணிக்கு கணவர் விஜயவண்ணன் உற்ற துணையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share This News