வாழ்நாள் சாதனையாளர் விருது

Share This News

மகள் பெயர் தஸ்விகாஜெயகரன். தஸ்விகா 1500 தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கில சொற்களைக் கூறுவார். இதை கேள்வியுற்ற சோழன் உலக சாதனை நிறுவனத்தினர் எம்மை அழைத்து விசாரித்தனர். சோழன் உலக சாதனை நிறுவனத்தினால் எனது மகளுக்கு 1 மழலை மொழிவித்தகர் என்ற பட்டத்தைச் சூட்டினர். என்னுடைய மகளின் 3 வது பிற்ந்த நாள் அன்று சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இந்நிகழ்வு இடம் பெற்றது. மகளின் பிறந்த தினத்தில் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் மழலை மொழிவித்தகர் என்ற பட்டம் கிடைத்தது. எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுத்தியது

என் பெயர் திருமதிடேனிகாஜெயகரன் ;.நான் பிறந்து யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலியிலாகும். ஒரு  சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். நான் கல்வி கற்ற பாடசாலை மல்லாவியோகபுரம் மகாவித்தியாலயம் ஆகும். நான் கலைப் பிரிவில் க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றேன். தமிழ், புவியியல், விவசாயம் ஆகிய பாடங்களை என் விருப்பப்படி கற்று பரட்சையில் சித்தி பெற்றேன். பல்கழைக்கழகத்திற்கு அனுமதிகிடைக்காமையினால் கல்வியைத் தொடர முடியவில்லை.

இந் நிலையில் என் பெற்றோர் எனக்குச் திருமணம் செய்வதற்குத் தயாரானார்கள். தில்லையம்பலம்ஜெயகரன் என்பவரை திருமணம் செய்துவைத்தார்கள். அவரின் சொந்த இடம் புங்குடுதீவாகும். சாவகச்சேரியில் தற்காலிகமாக வசித்துவந்தார். அவர் யாஃடிறிபேக்கல்லூரியில் க.பொ.த சாதாரணதரம் வரை கல்வி கற்றவர். நாம் சாவகச்சேரியிலுள்ள தென்னஞ்சோலைகள் நிறைந்த தம்பு தோட்டம் கோயில் குடியிருப்பில் தற்போது வசித்து வருகின்றோம். எனது ஆட்டோ சாரதியாகத் தொழில் புரிகின்றார். நாம் வாடகை வீட்டில் வசித்து வருகின்றறோம்.

எமது திருமண பந்தத்தின் பிரதிபலிப்பாக எமக்கு இரு குழந்தைகள் உள்ளனர். எனது முதலாவது மகள் இரண்டாயிரத்து இருபத்திரண்டாம் ஆண்டு வைகாசி மாதம் இருபத்தைந்தாம் ஆண்டு சைகாசிமாதம் இருபத்தைந்தாம் திகதி பிறந்தார். இவரின் பிறப்பு எம்மைப் பூரிப்பில் ஆழ்த்தியது. மகள் கிரகிக்கும் ஆற்றல் மிக்கவராக காணப்பட்டார். நான் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆங்கிலம் கற்ேறுன். நான் ஆங்கிலம் கற்கும் மகள் அதனை அவதானித்துக் கொண்டிருப்பார்.

மகள் பெயர் தஸ்விகாஜெயகரன். தஸ்விகா 1500 தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கில சொற்களைக் கூறுவார். இதை கேள்வியுற்ற சோழன் உலக சாதனை நிறுவனத்தினர் எம்மை அழைத்து விசாரித்தனர். சோழன் உலக சாதனை நிறுவனத்தினால் எனது மகளுக்கு  1 மழலை மொழிவித்தகர் என்ற பட்டத்தைச் சூட்டினர். என்னுடைய மகளின்  3 வது பிற்ந்த நாள் அன்று சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இந்நிகழ்வு இடம் பெற்றது. மகளின் பிறந்த தினத்தில் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் மழலை மொழிவித்தகர் என்ற பட்டம் கிடைத்தது. எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

 “ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் தம் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்

அதாவது தன் மகன் சான்றோன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்றதாய் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வார். அந்தப் பாக்கியம் எனக்கு மூன்று வயது மகளால் கிடைத்தது. நான் என்னை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

எனது மகள் தற்போது திருக்குறள் இருபது ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகிய நீதிப்பாடல்களைப் பாடுவார். அத்துடன்அப்பம் முப்பளம்.....”, “மந்திமாவது......”, “தோடுடைய செவியன்...............” போன்ற தேவாரங்களையும்உலகலாம் உணர்ந்து.......” என்ற புராணத்தையும் தன் மழலைக் குரலால் பாடுவார்.

மகள்  8ம்மாதத்திலேயே கதைக்கத் தொடங்கி விட்டார். அவர் முதல் கூறிய வார்த்தைஅப்பாஎன்பது தான். எல்லாக் குழந்தைகளும்அம்மாஎன்ற வாரத்தையைத் தான் முதல் கூறுவார்கள் .ஆனால் என் குழந்தைஅப்பாஎன்று அப்பாவைத்தான் அழைத்தது.   அடுத்து நிலா, வானம் என்ற சொற்களைக் கூறினார். நான் மகளுக்கு உணவு ஊட்டும் போது நிலாவைக் காட்டித் தான் உணவு ஊட்டுவேன். மகள் ஒரு வயதிலேயே“  நிலா நிலா ஓடி வா......” என்ற பாடலைப் பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.

தற்போது உயிர் எழுத்து, மெய் எழுத்துக்களை இனங்காண்பார். அத்துடன் ஆங்கில எழுத்துக்களையும் இனங்காண்பதுடன் அவற்றை எழுதும் ஆற்றலும் உடையவராக உள்ளார். இன்னும் என் குழந்தைக்கு ஏடு தொடக்கவில்லை. தஸ்விகாவின் சாதனை எம்மைப் பெரிய சந்தோக்ஷத்துக்கு உள்ளாக்கியுள்ளது. கல்வி வளம் பெரிதும் இல்லாத இந்தக் குடும்பத்துக்குட்டி தஸ்விகாவின் சாதனை உலக சாதனையாக மலர்ந்தது நாம் செய்தபாக்கியமே. எமக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது இறைவனின் அருள்தான். முதற் கண் நான் இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இதே போல’”தங்கத் தமிழ்விருது எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை .எவ்வித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் இருந்த எங்களுக்கு மீண்டுமீண்டும் சந்தோசத்தை தந்த தங்கத் தமிழ் விருதுகளிற்கு மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம்.

 

நன்றி