வாழ்நாள் சாதனையாளர் விருது

Share This News

என் அனைத்து வெற்றிக்கும் முருகன் அருளும் என் பெற்றோர் முன்னோர் ஆசியும். என் உடன் பிறந்தவர்கள்.என் பிள்ளைகள் மற்றும் என் பள்ளி ஆசிரியர்கள் , என் பத்திரிக்கை ஆசிரியர்கள், வார மாத இதழ் ஆசிரியர்கள் , மலேசிய வானொலி செய்தி பிரிவு மற்றும் மின்னல் பண்பலைக்கும், உற்றார் உறவினர்கள் , என் நண்பர்கள் , என்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்கும்v

வணக்கம்

தாய் தந்த தமிழில்தந்தை சொல்லி தந்த செந்தமிழில்

ஆசான் கற்று தந்த கன்னித்தமிழை கற்று தேர்ந்து.

கால் பதித்து தமிழை வணங்கி போற்றி , அதன் புகழ் பாடி

எண்ணத்தில் தோன்றும் சிந்தையை வண்ணத்தில் வைரமாக்கி வாசிப்போரை வியக்க வைத்து.

எழுது கோலை கையில் ஏந்தும் போதெல்லாம் எம்பெருமான் முருகன் அருளால் என்னை அறியாது என்னுள்ளிருந்து எழுந்த எழுத்தோவியங்கள் என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றதும் இறைவன் முருகன் அருளே....

அறியாத எட்டு வயதில் தந்தையின் கை பற்றி தமிழ்நேசன் நடத்திய சிறுவர் கதைபோட்டியில்  முதல் பரிசை பெற்றேன்...பதினெட்டு வயதில்   சிறந்த வாசுகி , சிறந்த எழுத்தாளர் என்ற தங்க பதக்க விருதை சூரியன் இதழ் ஆசிரியர் மூலம் பெற்றேன்.

அடுத்து  நாற்பது வயதில் மழைச்சாரல் குழுமத்தின் கைகோர்ப்பில்  என் முதல் புத்தக தொகுப்பை வெளியீடு செய்து சாதனை புரிந்தேன்.நாற்பத்தி எட்டு வயதில் பூச்சோங் வாசகர் இயக்கத்தில் திகிழரசி என்ற விருத்தை கொடுத்து சிறப்பு செய்தார்கள்.

ஐப்பதாம் வயதில் கோலாலம்பூர் வாசகர் இயக்கத்தில் திகில் நாயகி என்று சிறப்பு செய்தனர். ஐம்பத்து இரண்டாம் வயதில் உலக சாதனை பெண் விருதை சென்னையில் நந்தவனம் நிறுவனத்தினர் கொடுத்தனர். ஐப்பத்து மூன்று வயதில் தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கம் எழுத்தாணி விருது கொடுத்தனர்.

ஐம்பத்து நான்கு வயதில் ..தங்கமயில் விருது விழாவில் வாழ்நாள் சாதனை விருந்து கொடுக்க தேர்வு செய்ய பட்டிருக்கிறேன்.

இந்த தங்கமயில் விருது மாபெரும் விருது இதை பெருவதில் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும்..தரம் பார்த்து தரணியில் மிளிர செய்யும் தங்கமயில் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என் அனைத்து வெற்றிக்கும் முருகன் அருளும் என் பெற்றோர் முன்னோர் ஆசியும். என் உடன் பிறந்தவர்கள்.என் பிள்ளைகள் மற்றும் என் பள்ளி ஆசிரியர்கள் , என் பத்திரிக்கை ஆசிரியர்கள், வார மாத இதழ் ஆசிரியர்கள் , மலேசிய வானொலி செய்தி பிரிவு மற்றும் மின்னல் பண்பலைக்கும், உற்றார் உறவினர்கள் , என் நண்பர்கள் என்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்கும்

அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

எல்லா புகழும் இறைவனுக்கே.

நன்றி வணக்கம்

சரஸ்வதி வீரப்புத்திரன்.


என்னைப்பற்றி...

பெயர் :சரஸ்வதி வீரப்புத்திரன் நான்

வசிப்பது: பூச்சோங் சிலாங்கூர்மலேசியா

பிறந்த தேதி:22/03/1972

தொழில் :ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியில் இருந்தேன்.இப்போது முழு நேரம் எழுத்து பணியை செய்கிறேன்.

தொடக்கம் : நான் என் எட்டு வயதில் எழுத தொடங்கினேன்.

 

பெற்ற பரிசுகள்

விருதுகள்

1 ) தமிழ்நேசன் மாணவர் இதழ் நடந்திய சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.

2 ) சூரியன் மாத இதழ் இரண்டு முறை சிறந்த வாசக - எழுத்தாளர் என்று சிறப்பு செய்து தங்கப்பதக்கம் வழங்கினர்.

3 ) எழுத்தாளர் சங்கம் நடந்திய சிறுகதை போட்டியில் இரண்டு முறை ஆறுதல் பரிசு பெற்றேன்.

4 ) பூச்சோங் வாசகர் இயக்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன்.

5 ) கிள்ளான் வாசகர் இயக்கம் நடந்திய சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றேன்.

6 ) மலேசிய அரசு வானொலி மின்னல் பண்பலையில் சிறுகதை , இசை சொல்லும் கதை , போன்றவற்றிலும் பல முறை பரிசு பெற்றுள்ளேன்.

7 ) மலேசியா  நண்பனிலும் , மக்கள் ஓசையிலும் சிறுகதைகளுக்கு பரிசு பெற்றுள்ளேன்.

8 ) சிலாங்கூர் கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் இயக்கம் நடத்திய சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன்.

9) இதே இயக்கத்தில்சென்ற ஆண்டின் (2024) இறுதியில் திகில் அரசி என உயரிய விருது பெற்றேன்.

10) 2025 ம் ஆண்டில், நந்தவனம் நிறுவனம் சென்னையில் உலக சாதனை பெண் விருது பெற்றேன்.

11) நேர்பட பேசு நிறுவனம் உலக சாதனையாளர் சான்றிதழும் பாவலர் விருதும் பெற்றேன்.

12) முகநூல் கவிதை குழுமம் நடந்திய சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றதில் சிறுகதை மன்னன் விருது பெற்றேன்.

13)தமிழ்நாடு முத்தமிழ்ச் சங்கம் எழுத்தாணியின் அரியாசனம் 2025 ஈரோடு. அதில்எழுத்தாணி விருது பெற்றேன்.


எழுதிய நூல்கள்

எனது வெளிகள் என்ற நூலில்  20 திகில் கதைகளையும் , 17 சிறுகதைகளும் தொகுப்பாக வெளியீடு செய்துள்ளேன்.

150 திகில் கதைகளும் , 100க்கு மேல் சிறுகதைகளையும் , 30க்கு மேல் கட்டுரைகளும் இதுவரையில் எழுதியுள்ளேன்.அடுத்த திகில் கதை தொகுப்பு வெளியிடு செய்யும் முயற்சியில் இருக்கிறேன்.