2019 ஆம் ஆண்டில் வட்டார ரீதியில் நடை பெற்ற சாரண இயக்கத்தில் தலைமை ஏற்று வழி நடத்தியவர். 18 தமிழ்ப் பள்ளிகள் பங்கேற்ற இச்சாரண முகாமில், 80 மாணவர்களுக்கு கட்டுப்பாடு மற்றும் தலைமைத்துவ பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் பங்கேற்றமாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மலேசியாவின் கெடா மாநிலத்தில் கூலிம் எனும் இடத்தில் 13.8.1983 அன்று பிறந்தவர். தாயார் சரஸ்வதி மற்றும் தந்தை திரு. முத்தையா. உடன் பிறந்தோர்கள் ஐந்து பேர் உள்ளனர். தந்தை, இவருக்கு10 வயது இருக்கும் போதே காலமானார். அதன்பிறகு, தாயாரின் அயராத உழைப்பினால் வளர்க்கப்பட்டார். 13 வயது முதல் கல்வியையும் பகுதிநேர வேலையையும் ஒரேநேரத்தில் மேற்கொண்டு வந்தார்.
கல்விவாழ்க்கை
ஆரம்பக்கல்வியை கூலிம் தமிழ்ப் பள்ளியில் தொடங்கி, இடைநிலைப் பள்ளி கல்வியை சியோமீன் பள்ளியில் முடித்தார். தொடர்ந்து, ஆறாம் படிவம் எனப்படும் உயர்நிலைக் கல்வியை இரண்டு ஆண்டுகள் கற்று தேர்ச்சி பெற்றார். பின்னர், கோலாலம் பூரில் உள்ள மாலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையிலும் வரலாற்றுத்துறையிலும் மூன்று ஆண்டுகள் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
அதன்பின், ஆசிரியராக தகுதிபெற கெடாவில் உள்ள சுல்தான் அப்துல் ஹாலிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஒருவருடம் கற்று ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
இறுதியாக, சுல்தான் இட்ரிஸ் கல்விக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே இரண்டு ஆண்டுகள் கற்று முதுகலைப்பட்டம் பெற்றார். அடுத்ததாக, மலேசிய கல்வி அமைச்சின் கூட்டரசு உதவித்தொகையின் கீழ்முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
ஆசிரியர் வாழ்க்கை
கூலிம் தமிழ்ப்பள்ளி, கெடா — தற்காலிகஆசிரியர் (2003–2005)
ரிங்லெட் தமிழ்ப்பள்ளி — தற்காலிக ஆசிரியர் (2009)
போ (1) தமிழ்ப்பள்ளி — தற்காலிக ஆசிரியர் (2010)
உலுபெர்னாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (2010-2012)
பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி (2013-2020)
தானாமேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி (2020-2022)
சுங்காலா தோட்டத் தமிழ்ப்பள்ளி (2025-இன்றுவரை)
கற்பித்தபாடங்கள்
தமிழ்மொழி, அறிவியல், மலாய்மொழி, ஆங்கிலம், கணிதம், வரலாறு, உடல்நலக்கல்வி மற்றும் வடிவமைப்பும் தொழில்நுட்பமும்.
மலேசிய கல்வி அமைச்சு விருது
சிறந்த ஆசிரியர் விருது (2015) – மலேசிய கல்வி அமைச்சு
எழுதிய ஆய்வறிக்கைகள்
இது வரை கற்றல், கற்பித்தல் மற்றும் சமயத்துடன் தொடர்புடைய மொத்தம் நான்கு ஆய்வறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன.
முதல் ஆய்வறிக்கை “Student Team Achievement Division” எனும் கற்றல்–கற்பித்தல் அணுகு முறையை அடிப்படையாகக் கொண்டு, இணை வகுப்புமாணவர்களிடையே வாக்கிய அமைக்கும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தஆய்வு, இருமாறு பட்ட வகுப்பு மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்த்து, கூட்டு கற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
இரண்டாவது ஆய்வறிக்கை “இணை வகுப்புச் சூழலில் தமிழ் மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்”எனும் தலைப்பில் எழுதப்பட்டு, மாலாயா பல்கலைக்கழக ஆய்வேட்டில் வெளியிடப்பட்டது. இந்தஆய்வு, இணை வகுப்புகளில் இலக்கணக் கற்பிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் துல்லியமாக விளக்குகிறது.
மூன்றாவது ஆய்வு “தமிழ் மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கற்றல் – கற்பித்தல் செயலிகள் ”எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டு, ஆசிரியர்களுக்கும் செயலிகளின் பயன்பாட்டிற்கும் உள்ள தொடர்பினைவிளக்குகிறது.
இறுதியாக, “திருப்பாவையில் காணப்படும் திருமாலின் பெயர்கள்”எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரை எழுதப்பட்டது.
முனைவர் பட்டஆய்வு
முனைவர் பட்டத்திற்கான ஆய்வு இணை வகுப்பிற்கான கற்றல்–கற்பித்தல் தளத்தை உருவாக்கி அதன் தரத்தை ஆராய்தல் ஆகும். இதற்காக, 40-க்கும் மேற்பட்ட இணை வகுப்பு பள்ளிகள் ஆய்வில் சேர்க்கப்பட்டன.
Google Site வழியாக உருவாக்கப்பட்ட இத்தளம், பல்வகை இலவச செயலிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றல்–கற்பித்தல் அனுபவத்தை வழங்குகிறது. இதன் முக்கிய நோக்கம், இணை வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை ஏற்படுத்துவதாகும்.
இத்தளத்தில் 500-600 வினாக்கள், 20 காணொளிகள், 20 படவில்லைகள் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபடுவதற்காக புதிர்தன்மை கொண்ட செயலிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், 30 ஆசிரியர்கள் இந்தத் தளத்தின் உள்ளடக்கங்களைச் சரிபார்த்து திருத்தியுள்ளனர். ஆய்வின்முடிவுகள், மாணவர்கள் இலக்கணக் கற்றலில் தேர்ச்சிபெற இத்தளம் முக்கிய பங்கு வகித்ததை வெளிப்படுத்துகின்றன.
பள்ளிப்புறப்பாடநடவடிக்கைகள்
2019 ஆம் ஆண்டில் வட்டார ரீதியில் நடை பெற்ற சாரண இயக்கத்தில் தலைமை ஏற்று வழி நடத்தியவர். 18 தமிழ்ப் பள்ளிகள் பங்கேற்ற இச்சாரண முகாமில், 80 மாணவர்களுக்கு கட்டுப்பாடு மற்றும் தலைமைத்துவ பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் பங்கேற்றமாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும், ஆசிரியர்களுக்காகவும் சாரண முகாம் சார்ந்த பட்டறைகள் நடத்தப்பட்டன.
அதேபோல், வருடந்தோறும்மாநிலஅளவில்நடைபெறும்அறிவியல்விழாக்களில்மாணவர்கள்1முதல்5ஆம்நிலைகளில்இடம்பெறும்வகையில்வழிகாட்டியுள்ளார்.
வடிவமைப்பும் தொழில்நுட்பமும்
ஆசிரியர் வடிவமைப்பும் தொழில்நுட்ப மும்பாடத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், தானும் கற்றுத் துறை சார்ந்த போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.
Micro:bit எனும் நிரல் (coding) மேம்பாட்டு போட்டியில் 2025 ஆம் ஆண்டில் வட்டார மற்றும் மாநில ரீதியிலான புத்தாக்கப் போட்டியில் முதல் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும், விவசாயத்துறையில் மிளகாய், தென்னை, செம்பரை போன்ற தாவரங்கள் அதிகவிளைச்சல் தரும் முறைகளை ஆராய்ந்து, அதனைப் பற்றிய பட்டறைகளையும் பள்ளிகளில் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share This News