நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூர் பஞ்சாயத்து, செட்டிக்காடு என்ற குக்கிராமத்தில் திரு.தங்கவேல் சந்தோசம் என்பவருக்கு இரண்டாவது மகனாக 13 ஜூலை 1989 ஆம் ஆண்டு பிறந்தேன்.
நாமக்கல் மாவட்டம்,
நாமக்கல் வட்டம்,
புதுச்சத்திரம் ஒன்றியம்,
கதிராநல்லூர் பஞ்சாயத்து,
செட்டிக்காடு என்ற குக்கிராமத்தில் திரு.தங்கவேல் சந்தோசம் என்பவருக்கு இரண்டாவது மகனாக
13 ஜூலை 1989 ஆம் ஆண்டு பிறந்தேன்.
பிறகு குள்ளப்பநாயக்கன்பட்டி அதே பகுதியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படித்து பிறகு சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை என்ற பகுதியில் ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை படித்து பிறகு நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் பகுதியில் செங்குந்தர் மகாஜன ஹையர் செகண்டரி ஸ்கூலில் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பினை முடித்தேன்.
பிறகு நாமக்கல் மாவட்டம் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ இளங்கலை படிப்பு படித்த பிறகு எனது பட்டைய மேற்படிப்பிற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்து அதே பல்கலைக்கழகத்தில் டி எல் எல் ஏ எல் முடித்து விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் கிளை பொறுப்பாளராக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வந்தேன்.
கிளை பொறுப்பின் அடிப்படையில் மிக நேர்மையாகவும் துரிதமாகவும் பணி செய்த காரணத்தினால் தமிழ்நாடு,
கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அதே நிறுவனத்தில் தணிக்கை துறையில் துணை தணிக்கை அதிகாரி பதவி உயர்வு பெற்று சுமார் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தணிக்கை அதிகாரியாக நிர்வாகத்தால் அங்கீகரித்து பணி செய்து வந்தேன்.
சமூகத்தில் ஏற்படக்கூடிய அடக்குமுறைகள் ஏற்றத்தாழ்வுகளை கண்டு மனம் பொறுக்காமல் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டேன்.
இப்படி ஈடுபடுத்திக் கொண்ட போது நிர்வாக ரீதியாகவும் சமூக ரீதியாக மிகப்பெரிய ஒரு அடக்குமுறைகளும்,
கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்ட நிலையில் சமூக பணி செய்வதற்கு நிர்வாக பணி ஒரு தடை கல்லாக இருப்பதனால் அப்பணியில் இருந்து விலகினால் மட்டுமே சமூகப்பணி செய்ய முடியும் என்பதை உணர்ந்து எனக்கு ஒதுக்கிய தனியார் நிறுவனத்தின் உடைய தணிக்கை துறை பணியிலிருந்து ராஜினாமா செய்தேன்.
பணியை ராஜினாமா செய்த பிறகு பல்வேறு பகுதிகளில் சமூகம் சார்ந்த பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் உடைய அடிப்படை தேவைகள் மற்றும் அவர்களுடைய உரிமைகளை உணர்ந்து தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு விதமான கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.இதன் காரணமாக பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் பொதுமக்களுடைய அடிப்படை பிரச்சனைகளை கையாள்வதற்காக தொடர்ந்து சமூக களப்பணியானது பயணிக்க தொடங்கியது அதன் காரணமாக முற்றுகை போராட்டங்கள், கருப்பு
Share This News