1994 ஆம் ஆண்டு மே மாதம் , கோலாலம்பூர் , தர்மா இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி. 2007 ஆம் ஆண்டு பள்ளி மாற்றலாகி கோலாலம்பூர் , பெட்டாலிங் இடைநிலைப் பள்ளியில் பணி ஓய்வு (5.8.2021) பெறும் வரை பணி புரிதல். பணி ஓய்வு பெற்ற பிறகும் இன்றளவும் என் ஆசிரியர் பணி தொடர்கிறது. இதனால் , சுமார் 45 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கின்றேன்.
மாரிமுத்து அய்யாதுரை – நனி சிறப்பு ஆசிரியர்
குடும்பம்
பிறந்த திகதி – 06.08.1961 . இடம் – மலேசியா , நெகிரி செம்பிலான் , கோலாபிலா மருத்துவமனை. அப்பா திரு.அய்யாதுரை . அம்மா திருமதி. முத்துவேடி.( பெற்றோர் இருவரும் காலமாகிவிட்டார்கள்) தங்கைகள் – திலகம் , செல்வி . தம்பிகள் – சந்திரன் , மகேந்திரன்.
ஆரம்ப வசிப்பிடம் – நெகிரி செம்பிலான் , பகாவ் , மிடில்டன் தோட்டம்.
பிறகு ஜோகூர் , ஜெமெந்தா , நாகப்பா தோட்டம் ; சிகாமட் , வூல்ஸ் தோட்டம்.
ஆரம்பக் கல்வி – பகாவ், மிடில்டன் தோட்டத் தமிழ்ப் பள்ளி .1968 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பு. 1973 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு.
இடைநிலைக் கல்வி – பகாவ் , டத்தோ மன்சூர் இடைநிலைப் பள்ளி. 1974 ஆம் ஆண்டு புகுமுக வகுப்பு. 1979 ஆம் ஆண்டு ஐந்தாம் படிவம். எஸ்.பி.எம்.தேர்வு – 3 ஆம் கிரேட் தேர்ச்சி.முடிவு சிறப்பாக இல்லை. தேசிய மொழியில் (மலாய்மொழி) சிறப்பு தேர்ச்சி (கிரேடிட்) இல்லை மீண்டும் 1980 ல் தோட்டத்தில் பால் மரம் சீவும் வேலை செய்துகொண்டே எஸ்.பி.எம்.தேர்வு – மீண்டும் 3 ஆம் கிரேட் தேர்ச்சி தான். ஆனால், தேசிய மொழியில் (மலாய்மொழி) சிறப்பு தேர்ச்சி (கிரேடிட் – சி 6) பெற்றேன்.
தற்காலிக ஆசிரியர் பணி.
1981 ஆம் ஆண்டு , பகாவ் , கெல்பின் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணி.. தொடர்ந்து 1982 , 1983 ஆம் ஆண்டுகளில் பகாவ் , சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணி…
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
1984 ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை கோலாலம்பூர் , ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளுதல்.
கல்லூரியில் ‘ நனி சிறப்பு பயிற்சி ஆசிரியர் ‘ EXCELLENCE TRAINEE TEACHER என்ற நற்சான்றிதழ் பெறுதல்.
பயிற்சி ஆசிரியராக ஆசிரியர் பணி
1987 ஆம் ஆண்டு , கிம்மாஸ் , சுங்கை கெளாமா தோட்டத் தமிழ்ப் பள்ளியில்
பயிற்சி ஆசிரியராக பணி புரிதல். அதோடு , பணி செய்துகொண்டே பல்கலைக்கழகத்திற்குச் சென்று பட்டப்படிப்பு தொடர எஸ்.தி.பி.எம். தேர்வு எழுத முனைதல். 1989 ஆம் ஆண்டு மே மாதம் சாலை விபத்தில் சம்பந்தப்படுதல். சுமார் 10 மாதங்கள் அரசாங்க மருத்துவ விடுப்பில் இருத்தல். 1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பள்ளி மாற்றலாகி , பகாவ் , சியலாங் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் மூன்று மாதங்கள் பணி புரிதல்.
கோலாலம்பூர் , மலாயாப் பல்கலைக்கழகம்
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் , கோலாலம்பூர் , மலாயாப் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் இந்திய ஆய்வியல் துறையில் தமிழ்மொழியும் , வரலாற்றுத் துறையில் வரலாற்றையும் பாடங்களாகப் படித்து 1994 ஆம் ஆண்டு இளநிலை பட்டதாரியாக ஆசிரியர் பணியை மேற்கொள்ளுதல்.
இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி
1994 ஆம் ஆண்டு மே மாதம் , கோலாலம்பூர் , தர்மா இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி. 2007 ஆம் ஆண்டு பள்ளி மாற்றலாகி கோலாலம்பூர் , பெட்டாலிங் இடைநிலைப் பள்ளியில் பணி ஓய்வு (5.8.2021) பெறும் வரை பணி புரிதல். பணி ஓய்வு பெற்ற பிறகும் இன்றளவும் என் ஆசிரியர் பணி தொடர்கிறது. இதனால் , சுமார் 45 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கின்றேன்.
திருமணம் – என் குடும்பம்
1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி ‘ மணிமொழி ‘ என்பவரைக் கரம் பிடித்தேன். அப்பொழுது நான் கோலாலம்பூர் , மலாயாப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவன். மனைவி மணிமொழி ‘ BUILDING MANAGER ‘ பணி புரிகிறார். மகள் சரண்யா ‘ HUMAN RESOURCES – EXECUTIVE OFFICER ‘ பணி புரிகிறார். மகன் ஹரிபிரசாத் ‘ CHEMICAL ENGINEER ‘
பணி புரிகிறார். இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. இவரின் மனைவி – சுஹன்யா. இவரும் CHEMICAL ENGINEER பணி செய்கிறார். இளைய மகன் இராஜதீபன். இவர் AIRCRAFT ENGINEER பணி செய்கிறார். இப்பொழுது நாங்கள்
கோலாலம்பூர் , ஸ்ரீ செந்தோசா என்ற இடத்தில் வசிக்கின்றோம்.
கல்விப் பணியில் நான்
என்னிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் இன்று சிறப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள். அரசாங்க பி.எம்.ஆர். , எஸ்.பி.எம். தேர்வுக்கான தமிழ்மொழி , வரலாறு ஆகிய பாடங்களுக்கான மாணவர்களின் தேர்வுத் தாட்களைத் திருத்தும் பணியைப் பல ஆண்டுகள் செய்துள்ளேன். .நான் நான்கு முறை கல்வி அமைச்சிடமிருந்து ‘ OUTSTANDING SERVICE AWARD ‘ பெற்றுள்ளேன். மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு, பட்டறை, பயிற்சி முகாம், தன்முனைப்புத் தூண்டல் ஆகியவற்றை நடத்தியுள்ளேன். ஆசிரியர்களுக்கான அனைத்துலக , தேசிய , மாநில , வட்டார - மாநாடு , கருத்தரங்கு போன்றவற்றில் பங்கு பெற்றுள்ளேன்.
மேலும், அனைத்துலக , தேசிய , மாநில , வட்டார நிலையில் மாணவர்களுக்கான சொற்போர் , பட்டிமன்றம் , பேச்சுப் போட்டி , கட்டுரை எழுதும் போட்டி , கவிதை ஒப்புவித்தல் , திருக்குறள் மனனப் போட்டி , திருமுறை ஓதுதல் மாணவர் முழக்கம் , புதிர்ப் போட்டி போன்ற போட்டிகளில் நீதிபதியாக , நடுவராக இன்றளவும் பணி ஆற்றுகின்றேன்.
சமூகப் பணியில் நான்
தற்சமயம் மலேசியத் தமிழ்க் கலை ,இலக்கியப் படைபாளர் அமைப்பின் பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ளேன். மலேசிய இந்து சங்கம் , மலேசிய இந்து தர்ம மாமன்றம் , அறம் செய்வோம் , முத்தமிழ்ச் சங்கம் , ஆகியவற்றில் உறுப்பினராகச் செயலாற்றுகிறேன்.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி , சிரம்பான் நகரிலுள்ள ராம்சா கல்வி மையம் , பல ஆண்டுகளாகத் தமிழ் சேவையை ஆற்றி வரும் எனக்குக் ‘ கல்விச் சேவகன் ‘ என்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தது.
‘ தமிழோடு உயர்வோம் ‘
நன்றி.
Share This News