யோகலெஷ்மி அன்பரசன், பேச்சாளர், ரேஸ் அகாடமி - இந்தியா அவர்களுக்கு தங்க தமிழ் விருதுகள் பெருமையுடன் வழங்கும் சிறந்த மேடை பேச்சாளர் விருதைப் பெற்றுள்ளார்.
வணக்கம்
என் பெயர் ம யோகலெஷ்மி.என் வயது 21 . திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் தாப்பாய் கிராமம்.எனது பெற்றோர் பெயர் மணிமொழி(தந்தை )இளஞ்சியம் (தாய்).என் தாயார் கணவனால் கைவிடப்பட்ட பெண்..16 ஆண்டுகள் என்னை என் தாயார் யார் துணையும் இன்றி வளர்த்தார் .16 வயதினில் என் தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது அப்போது என்னை பார்த்து கொள்ள யாரும் இல்லாததால் அன்பரசன் ஆதனூர் அவர்களுக்கு என்னை திருமணம் செய்து கொடுத்தார்கள்.அதன் பிறகு என் கணவர் என்னை பட்ட படிப்பான இளங்கலை கணினி அறிவியல் படிக்க வைத்தார் ..
நான் சிறு வயதில் இருந்தே அதாவது மூன்றாம் வகுப்பு பயிலும் பொழுதில் இருந்தே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றிருக்கிறேன் ..சுமார் 20 சான்றிதழ்கள் பெற்றிருக்கிறேன் .. கல்லூரி பயிலும் பொழுது தமிழ் வளர்ச்சி துறையால் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டு மூன்று முறை தோல்வி அடைந்தேன் .பெரும் பயிற்சிக்கு பிறகு ஜவகர்லால் நேரு பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்று 5000 ரொக்கமும் சான்றிதழும் பெற்றேன்.அதனை தொடர்ந்து உலக தமிழ் சங்கம் மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கிய பயிற்சி பட்டறைக்கு தேர்வு செய்யப்பட்டு 8 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன்...
அதன் பின்பும் என் சொந்த ஊரான தாப்பாய் கிராமத்தில் நான் பயின்ற நடுநிலைப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினேன் ..மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் கலந்து கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் ஐயா பிரதீப் குமார் அவர்களின் கரங்களில் பொண்ணாடை மற்றும் பரிசு பெற்றேன்..எனக்குள் புகைப்பட திறமைகளும் உண்டு..என் கல்லூரிகளில் நடைபெற்ற புகைப்பட போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.. கைபேசி வாயிலாக வீடியோக்கள் எடிட்டிங் செய்வேன்... தட்டச்சு ஆங்கிலம் கற்றேன்...
இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவேன் .. கிராமத்தில் சாமி பாடல்கள் பாடி நம் கலாச்சாரத்தை பின் பற்றுவேன் .. தற்போது எனக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள்.என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்.நான் TNPSC பயிற்சிக்கு சென்றுகொண்டு இருக்கேன்... தங்க தமிழ் விருதுக்கு நான் தேர்வாகி இருக்கேன் என்று என்னும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது...நிச்சியமாக தங்க தமிழ் விருது பின் வரும் எதிர்காலங்களில் எனக்கு தூண்களாக அமையும் ..என் வெற்றியின் முதல் படியாக இருக்கும் என்று நினைவு கூறுகிறேன் ... நன்றிகள் பல தங்க தமிழ்
Share This News