இலங்கையின் மலையகத்தில் உள்ள லக்கி லேண்ட் என்னும் சிறிய கிராமத்தில் வன்னிமுத்து சந்திரகாசம் மற்றும் கந்தையா சுசிலா ஆகிய இருவருக்கும் 2002.11.30ம் திகதி அன்று மகனாக பிறந்தேன் .
பல்லாயிரம் கோடி உயிர்கள் இதன் மத்தியில் ஜணித்த ஓர் உயிர் முதல் பார்வையே துயரம் வளர்ந்த காலம் துன்பம் பசி என்னும் அரக்கன் ஆட்டி வைத்த காலம் பல ..பார்க்கும் இடமெல்லாம் பஞ்சம், பட்டின. . கண்களை கசக்கி கொண்டு கருவிழி எங்கும் கண்ணீர் பாய கதறல்கள் மத்தியிலும் வறுமையின் உச்சத்திலும் காலத்தின் கட்டாயத்தால் பிறந்த ஓர் பிறவி.
கற்கள் நிறைந்த பாதைகள் ....
நிரம்பி வழியியும் இருளின் கோரத்தால் திறக்க முடியாத ஜன்னல்கள். ..
எத்திசையாலும் நகரும் கரை படிந்த கரும் கதவுகள். ..
கந்தையிலும் கசக்கிய கந்தல் துணியை அணிந்த என் இரு உயிர்கள் ....
காலம் கடந்தும் கஷ்டங்கள் கடக்கவில்லை
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் ஏழ்மைக்கு இருங்காத கள் நெஞ்ச மனுக்குளம்.
அது ஒரு கவிதை. ..
ஒவ்வொரு அலைக்கும் ஒரு கண்ணீர் ஓசை,
ஒவ்வொரு மலருக்கும் ஒரு மக்களின் நினைவு,
வெண்மதியின் கீழ் விழிக்கும் தென்றலின் ஓசை,
யுத்தங்கள் கண்டாலும் இசையும் இசையுடன் வாழ்ந்த நிலம்
இழப்புகளால் அல்ல இனிமைகளால் பேசும் என் நாடு.
காலனி இல்லாத பாதங்கள்,
உணவுக்கு வரி கட்டும் கரங்கல்,
கைபுளிக்க இருந்தாலும் வரலாறு புத்தகங்களில் இல்லை,
மழைக்கன் திறக்கும் போது மழையகம் சிரிக்கிறது ,
காற்றின் ஓசையில் கூட கவிதை எழுதும் மரங்கல்,
ஒவ்வரு காற்றும் கண்ணீர் போல சுத்தம் ,
மலர்கள் போல் புன்னகைக்கும் மலைகள்,
நிழலாக விரியும் தேயிலை மலைகள்,
இவற்றோடு போராடி பிறப்பிற்கான அடையாளத்தை இவ் உலகிற்கு காட்ட
மலைகளின் மடியில் மெலிதான குரலோடு இலங்கையின் மலையகத்தில் உள்ள
லக்கி லேண்ட் என்னும் சிறிய கிராமத்தில் வன்னிமுத்து சந்திரகாசம் மற்றும் கந்தையா சுசிலா ஆகிய இருவருக்கும் 2002.11.30ம் திகதி அன்று மகனாக பிறந்தேன் .
எனது ஊர் பாடசாலையான ப /லக்கிலேண்ட் தமிழ் மஹா வித்தியாலயம் ஆரம்ப கல்வியை கற்று கொண்டேன். பின்பு மேற் படிப்பிற்காக வெளி பாடசாலையான ப /ஹியூகோலண்ட் தமிழ் மஹா வித்தியாலயதில் உயர் கல்வியை கற்று கொண்டேன் .
அதன் பின்பு குடும்ப சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்தேன் இதன் பிறகு வாழ்க்கை முடிந்தது என பல இரவுகள் கண் விழித்து புலம்பி கிடந்தேன். எனக்கான ஓர் அடையாளம் என்ன என்று எனக்குள்ளே நான் தேட ஆரம்பித்தேன்.
ஒரு சிற்பி சிலை வடிப்பது போல் நான் என்னையே மெதுவாக செதுக்கி கொண்டேன்.
நான் என் பாடசாலை நாற்களில் ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் கொண்டவனாய் காணப்பட்டேன். எனக்குள் இப்படி ஒரு திறமை இருப்பதை நான். உணர்ந்து கொள்ள என் ஆசிரியர் எனக்கு உதவி செய்தார்.
முதலில் நான் என். வீட்டில் என் பயணத்தை ஆம்பித்தேன் கடதாசிகளில் ஓவியம் வரைந்த நான் சுவர்களில் ஓவியம் வரைய கற்றுகொண்டேன். பின்பு நான் ஆரம்ப கல்வி கற்ற என் ஊர் பாடசாலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடசாலையிலும் ஓவியம் வரைய ஆரம்பித்தேன்
படி படியாக நானும் என் குடும்பமும் தலை நிமிர ஆரம்பித்தோம் .
பின்பு பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றேன். வீடுகள், கோவில், பாடசாலை, சுவர்கள், கட்டிடங்கள், தங்கும் விடுதி, உணவகம், ஒய்வு இல்லம் போன்ற இடங்களில் ஓவியம் வரைய வாய்ப்புகள் கிடைத்தது. முதன் முறையாக இலங்கையின் தமிழ் ஊடகங்களின் ஒன்றான மலையகம் எனும் தொலைக்காட்சிக்கு நேரடி ஒளிபரப்பு ஒன்றிலும் கலந்து கொண்டேன்.
என் 20வது வயதில் இலங்கையின் பல் பொருள் அங்காடிகளில்
முதல் இடத்தை வகிக்கும் The john Keells Holding Company யில் 2022ஆம் ஆண்டிற்கான The Employed Of The Year விருதினையும் பெற்றுக்கொண்டேன் .
எனக்குள் பல்முக திறமைகள் இருப்பதை என் தாய் எனக்கு நினைவு படுத்தினால் பின்பு நான் photographs, video Editing, photo shooting, photo editing போன்ற திறமைகளும் எனக்கு உண்டு அது மட்டும் அன்றி எனக்குள்
dancing, guitar, piano, organ, புல்லாங்குழல் வாசிப்பது போன்ற விடயங்களிலும் சிறந்து விளங்கினேன் .
நான் சிறு வயது முதல் பேசுவதில் திறமை உள்ளவன் என் பேச்சு மூலம் மற்றவர்களை ஊக்குவிப்பதிளும் ,மற்றவரை உற்சாக படுத்துவதும்சா, சதாகமான விடயங்களை பேசுவதும் , வெற்றிக்கான வார்த்தைகளை பேசுவதும் அதை தொடர்ந்து இதன் மூலம் pushup Life எனும் you tube chenal ஒன்றிணையும் சிரியாதாக ஆரம்பித்தேன்
2021.10.30 ஆம் திகதி அன்று Ledger Arts எனும் பெயரில் எனது சொந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது
PAINTINGS
SKETCH ART
WALL PAINTING
OIL ART
MOKO ART
WEDDING ART
BIRTHDAY ART
WALL DECORATE
CANVAS ART
போன்ற ஓவியங்கள் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டது
பின் grow more Lanka எனும் நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இப்போது எனக்கு வயது 23 இந்த வயதில் தங்க தமிழ் நிறுவனம் என்னை தெரிவு செய்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்
எனக்குள் இருக்கும் திறமையையும் என்னையும் இன்னும் முன்னோக்கி கொண்டு செல்ல இது ஒரு சிறந்த இடமாக அமையும் என நினைக்கின்றேன் .
இக் கால கட்டத்தில் விருது என்பது மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகின்றது அது மட்டும் இன்றி பல்வேறு துறைகளில் உள்ள பல திறமையாளர்கள் தங்களின் திறமையை மூடி வைத்துள்ளனர் இவர்களை இணங்கண்டு அவர்களை கெளரவிப்பது மிகவும் பாராட்டக்குரியத்தக்க விடயமாக அமைகின்றது
வரும் காலங்களில் தங்கள் பணியை மென் மேலும் விரிவு படுத்தவும் இது போன்ற நிகழ்வை நடத்தவும், இவ்வாறான பணியை முன்னோக்கி நடத்தும் தங்க தமிழ் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Share This News